கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், சீனா, ஜெர்மனி, இந்தியா எனப் பல நாடுகளும் கரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன.
இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 488 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2045 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா வைரசிற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள், வல்லுநர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய சவாலாகும். இந்த நெருக்கடியான நேரத்தை அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள இது ஒரு வாய்ப்பாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா விவகாரத்தை அரசியலாக்கும் ஆந்திர அரசு - பவன் கல்யாண் குற்றச்சாட்டு