மக்களவையில் இன்று நடப்பு கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ட்யூப் லைட் என பிரதமர் கூறிய கருத்து மக்களவையில் பரபரப்பை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "இன்றைய முக்கிய பிரச்னை வேலைவாய்பின்மை, பிரதமரிடம் இதுகுறித்து பல முறை கேள்வி எழுப்பியுள்ளோம். ஆனால், அதுகுறித்து பிரதமர் வாயை கூட திறக்கவில்லை. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் நீண்ட நேரம் உரையாற்றினார். ஆனால், அவரும் வேலைவாய்ப்பு அமைப்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ், நேரு, பாகிஸ்தான் ஆகியவை பற்றி பேசி முக்கிய பிரச்னைகளில் இருந்து பிரதமர் மக்களை திசை திருப்புகிறார்" என்றார்.
இதையும் படிங்க: ‘ராகுல் காந்தி ஒரு ட்யூப் லைட்’ - மக்களவையில் நக்கலடித்த மோடி