உத்திரப் பிரதேசம் மாநிலம் அசாம்கர் மாவட்டம் தைவான் பகுதியில் உள்ள பட்டியலின மற்றும் பாஸ்கான் கிராமத்தின் தலைவரான சத்யமேவ் (42), கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக உத்தரப் பிரதேச காவல்துறையினர் நான்கு பேர் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், "பெண்களின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக உத்தரப் பிரதேச அரசிடம் பேசினேன். புலந்த்ஷாஹர், ஹப்பூர், லக்கிம்பூர் கெரி மற்றும் கோரக்பூர் போன்ற பல சம்பவங்கள் உத்தரப் பிரதேச அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முற்றிலும் தோல்வியுற்றது என்பதை நிரூபித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளின் மனதில் சட்டத்தின் பயம் இல்லை. இதன் விளைவாக, பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. காவல்துறையினரால் பாதுகாப்பை வழங்கவோ அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கவோ முடியாது. உத்தரப் பிரதேச அரசு சட்டம் ஒழுங்கு முறையை மறுஆய்வு செய்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.