தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்த பெருமைக்கு உரியவரும், இந்திய அரசியலில் 50 ஆண்டுகள் கோலோச்சியவருமான மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 96ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, திமுக தொண்டர்கள் இவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இன்று மாலை நந்தனம் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திமுக தலைமை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்கிறேன். பெருமைக்குரிய தமிழ் மக்களின் உண்மையான தலைவர் அவர். அவரின் நினைவுகள் காலத்தால் அழியாதவை!' என்று குறிப்பிட்டுள்ளார்.