கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம் கண்டுவருகிறது. இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, கரோனாவின் தாக்கம் அதிகரிப்பதற்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கரோனா பரவல் மட்டும் அதிகரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவுடன் ஒரு விளக்கப் படத்தை வெளியிட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகான காலத்தில், கடந்த 18 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டுவருகிறது. இந்த விவகாரத்தில், பாஜக அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிபிஇ உடையில் 8 மணி நேரம் பணி' - சிரமங்களை விவரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்