கடந்த சில நாள்களாக இந்திய எல்லையான லே பகுதியில் சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. சீனப்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், "இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பின்னர் சிறந்த பாதுகாப்புக் கொள்கையை இந்தியா வைத்திருப்பதை உலகநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன" என்று நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அவரின் இக்கருத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
லடாக் எல்லையின் யதார்த்தம் அனைவருக்கும் தெரியும் என்றும் ராகுல் காந்தி அமித் ஷாவை கடுமையாக சாடியுள்ளார்.