நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும், நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 701 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்றுவந்த 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்குப் பிறகு இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாட்டில் வைரஸ் தொற்று அதிதீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
அவரின் இந்தக் கருத்து தொடர்பாக ட்விட் செய்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, உலகளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தரவுகளை மேற்கோள்காட்டி, கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
"India at good position in #COVID19 battle?" pic.twitter.com/HAJz7En6Wo
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"India at good position in #COVID19 battle?" pic.twitter.com/HAJz7En6Wo
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020"India at good position in #COVID19 battle?" pic.twitter.com/HAJz7En6Wo
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020
வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விழுக்காடு 62.93ஆக உள்ளது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மிக மோசமான மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் இதுவரை இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 289 பேர் உயிரிழந்துள்ளனர்.