பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஓய்வு எடுப்பதற்காக ராகுல் காந்தி சிம்லா சென்றுள்ளார். விமானம் மூலம் சண்டிகர் சென்ற அவர், அங்கிருந்து சாலை வழியே சரப்ராவுக்குச் சென்று பிரியங்கா காந்தியின் பங்களாவில் தங்கவுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு அங்கே தங்கவுள்ள அவர், கட்சி சார்ந்த எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்லாவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சரப்ரா, கடல் மட்டத்திலிருந்து 8,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வழக்கமாக அங்கு பயணம் மேற்கொள்வர்.