இந்திய-சீன ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
தாக்குதலைத் தொடர்ந்து நாட்டு மக்களிடைய உரையாடும்போது பிரதமர் மோடி, "இந்திய நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை" என்றார். இந்தியா பகுதியில் சீனா அமைத்திருந்த கூடாரத்தை நீக்க முயன்றபோது இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சீனா நமது நிலத்தை கைப்பற்றிவிட்டதாக லடாக் பகுதிவாசிகள் கூறுகின்றர். பிரதமர் நமது நிலத்தை யாரும் கைப்பற்றவில்லை என்று கூறுகிறார். கண்டிப்பாக ஒரு தரப்பு பொய் கூறுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Ladakhis say:
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
China took our land.
PM says:
Nobody took our land.
Obviously, someone is lying. pic.twitter.com/kWNQQhjlY7
">Ladakhis say:
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2020
China took our land.
PM says:
Nobody took our land.
Obviously, someone is lying. pic.twitter.com/kWNQQhjlY7Ladakhis say:
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2020
China took our land.
PM says:
Nobody took our land.
Obviously, someone is lying. pic.twitter.com/kWNQQhjlY7
மேலும், எல்லை பகுதியை சீனா ஆக்கமித்துள்ளது குறித்து லடாக் பகுதிவாசிகள் விளக்கும் ஒரு வீடியோவையும் அத்துடன் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
முன்னதாக, இன்று திடீரென்று லடாக்கின் நிம்மு பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருக்கும் களநிலவரத்தை ஆய்வு செய்தார். அவருடன் முப்படைக்கான தலைமை தளபதி பிபின் ராவத்தும் ராணுவத் தளபதி நரவணேவும் உடன் சென்றனர். கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: 'மறமானம் மாண்ட...' - திருக்குறளை மேற்கோள்காட்டிய மோடி