காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதியான வயநாடுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாள்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து செய்தித்தாளில் படித்துவிட்டு சகோதரிகள், அம்மாக்கள் என அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இந்தியாவை கேலிக்குள்ளாக்கி வெளிநாடு வாழ் மக்கள் விமர்சித்துவருகின்றனர். பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் தலைநகராக இந்தியா உள்ளது. உன்னாவ் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கார் சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானபோது பிரதமர் இதுகுறித்து கருத்து வெளியிடவில்லை.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார். இதுகுறித்து பிரதமர் மோடி வாயைக்கூட திறக்கவில்லை. உங்கள் நாட்டு பெண்களை பாதுகாக்க முடியாதா என வெளிநாட்டவர் கேள்வி எழுப்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் வெறுப்பையும், வன்முறையையும் அடிப்படையாக கொண்டது. வெறுப்பு, வன்முறை, பிரிவினைவாதம் ஆகியவையின் அடிப்படையில்தான் அவரின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையும் உள்ளது. மக்கள் பயத்தில் வாழ்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: என்கவுன்டரால் நீதி நிலைநாட்டப்படாது - எஸ்.ஏ. பாப்டே