மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது.
இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று ஸ்மிருதி இரானி அமேதியில் வாக்களிக்க வந்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து வருடத்திற்கு முன் என்னுடைய பெயர் பிரியங்கா காந்திக்கு தெரியாது. ஆனால் தற்போது, என்னுடைய பெயர் மட்டும்தான் உச்சரித்துவருகிறார் என தெரிவித்தார்.
மேலும், அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ஏன் வாக்குப்பதிவின்போது இங்கு வரவில்லை. அவருக்கு ஏழைகளை பற்றியெல்லாம் கவலையில்லை என குற்றம்சாட்டினார்.