ETV Bharat / bharat

ஹெச்-1பி விசா தடையால் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பாதிப்படைவார்கள் - ராகுல் காந்தி‌ - ஹெச்-1பி விசா அமெரிக்கா தடை

டெல்லி: ஹெச்-1பி விசா தடையானது பல மில்லியன் இந்தியர்களுக்கு பெரிதும் பாதிப்பு எற்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

rahul
rahul
author img

By

Published : Jul 3, 2020, 9:36 AM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , அமெரிக்காவில் உள்நாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பணி செய்பவருக்கு வழங்கப்படும் ஹெச்-1பி, ஹெச்- 4 விசாவை இந்தாண்டு இறுதிவரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் இந்திய ஐடி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்பட பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்-1பி விசா நிறுத்திவைப்பு பல லட்சம் இந்தியர்களையும், அமெரிக்கா நிறுவனங்களையும் பாதிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

  • America has benefited enormously by embracing India’s vast talent pool through its H-1B program.

    Its suspension will impact millions of Indians and US firms.

    It should be revoked.https://t.co/JoHufgTaDe

    — Rahul Gandhi (@RahulGandhi) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்தப் பதிவில், "அமெரிக்கா தனது ஹெச்-1 பி திட்டத்தின் மூலம் பல இந்தியர்களின் திறமையை தழுவி பெருமளவில் பயனடைந்துள்ளது. இந்தத் தடையானது மில்லியன் கணக்கான இந்தியர்களை பாதிப்பது மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களையும் பெரிதளவில் பாதிக்கும். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த ரத்து அமலுக்கு வந்தவுடன் ட்விட்டரில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #H1Bvisas என்ற ஹெஷ்டேக்கை உலகளவில் ட்ரெண்ட் செய்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் நினைவு அஞ்சல் தலை விரைவில் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.