உலகில் பசியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளது. சமீபத்தில் பசியால் வாடும் உலகநாடுகள் பட்டியலைச் சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. 119 நாடுகள் இடம் பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த நிலை குறித்து மத்திய அரசை விமரித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார். அதில், "இந்தியாவின் ஏழைகள் பசியுடன் உள்ளனர். ஏனெனில் அரசாங்கம் அதன் சில சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்புவதில் பிஸியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் (88), நேபாளம் (73), பங்களாதேஷ் (75) உள்ளிட்ட அண்டை நாடுகளை விட இந்தியா தரவரிசை குறைவாக இருப்பதைக் காட்டும் வரைபடத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ருவாண்டா (97), நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) உள்ளிட்ட 13 நாடுகள் மட்டுமே இந்தியாவுக்கு பின்னால் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.