ETV Bharat / bharat

ராகுல்காந்தி இந்தியாவில்தான் பிறந்தார்- ஒய்வு பெற்ற நர்ஸ் தகவல்

வயநாடு: ராகுல்காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் எனவும், அவரை என் கைகளால் தான் ஏந்தினேன் என கேரளாவை சேர்ந்த ஒய்வுப்பெற்ற நர்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் ராகுல் குறித்த சர்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒய்வு பெற்ற நர்ஸ் ராஜம்மா வவாதில்
author img

By

Published : May 3, 2019, 9:20 PM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடந்த சில நட்களுக்கு முன்பு மத்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதத்தை ஏற்ற உள்துறை அமைச்சகம் 14 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க கோரி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து டெல்லியை சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகியோர் ராகுலின் குடியுரிமையை மேற்கோள் காட்டி அவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம். வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்ரி கல்லூர் பகுதியை சேர்ந்த ராஜம்மா வவாதில் என்ற 72வயது ஒய்வுபெற்ற நர்ஸ் ராகுல் காந்தி இந்தியாவில் தான் பிறந்தார் என்பதற்கு தான் சாட்சி எனக் கூறியுள்ளார். இவர் டெல்லி ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் பயிற்சி பெற்று பின்னர் ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.

Rahul
ராகுல்காந்தி

இது தொடர்பாக அவர் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ராகுல்காந்தி கடந்த 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹோலிஃபேமலி மருத்துவமனையில் தான் பிறந்தார். நான் அப்போது அந்த மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக இருந்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ஆவேன். ஏன்னென்றால் சோனியா காந்திக்கு பிறந்த ஆண்குழந்தையை கையில் ஏந்திய செவிலியர்களில் நானும் ஒருவர். குழந்தையில் ராகுல் காந்தி மிகவும் அழகாக இருந்தார். பிரவசவத்தின் போது ராகுல்காந்தின் தந்தை ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோர் பிரவச அறைக்கு வெளியில் இருந்தனர். நான் இந்த நிகழ்வை பலமுறை எனது குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறேன்.

ஆனால் ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி புகார் எழுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.