உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் செப்டம்பர் 14ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை உத்தரப்பிரதேச காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகிறது.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இன்று (அக். 1) உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்றனர்.
அப்போது, ஹத்ராஸ் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை யமுனா நெடுஞ்சாலையில் வைத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதை சற்றும் எதிர்பாராத ராகுல், பிரியங்கா காந்தி, நொய்டாவிலிருந்து ஹத்ராஸிற்கு நடந்து செல்ல தீர்மானித்து, தற்போது நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க...உ.பி.யில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்; மேலும் இரு பெண்கள் பாதிப்பு