ETV Bharat / bharat

கோழைத்தனத்தால் இந்தியா பெரிய விலையை கொடுக்கப் போகிறது -ராகுல் காந்தி! - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

டெல்லி: ஆளும் அரசின் கோழைத்தனத்தால், இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்கப் போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆளும் அரசின் கோழைத்தனத்தால் இந்தியா பெரிய இழப்பை சந்திக்க போகிறது -ராகுல் காந்தி!

author img

By

Published : Jul 19, 2020, 12:24 AM IST

இந்திய -சீன எல்லையான லடாக்கில் கடந்த மாதம் இரு தரப்பு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 40 வீரர்கள் உயிரிழந்தும் அது குறித்து சீனா எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இதனையடுத்து இருநாட்டு ராணுவத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சீனப்படை இந்திய எல்லையிலிருந்து பின்வாங்கியதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லே எல்லைக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், “இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். சீனா எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. எல்லையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. ஆனால் மொத்தமாக நிலைமை அப்படியே மாறிவிடும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது. எல்லை பிரச்னை குறித்து உத்திரவாதமாக எதுவும் தெரிவிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

  • China has taken our land and GOI is behaving like Chamberlain. This will further embolden China.

    India is going to pay a huge price because of GOI’s cowardly actions. pic.twitter.com/5ewIFvj5wy

    — Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சை மேற்க்கொள்காட்டி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “சீனா நமது நிலத்தை பறித்துக்கொண்டது. பாஜக அரசு ஓர் அடிமையைப்போல் நடந்துக் கொள்கிறது. இதனால், சீனாவின் துணிச்சல் மேலும் அதிகரிக்கும். மேலும் பாஜக அரசின் கோழைத்தனத்தால், இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்கப் போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'இந்தியாவை சீனா எதிரியாகக் கருதுகிறது' - பாதுகாப்பு வல்லுநர் விக்ரம்ஜித் சிங்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.