மேஷம்:
இந்தாண்டை சிறப்பாக தொடங்குங்கள். வேலையில் வெற்றியை எதிர்பார்க்கலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகள் சாதகமாகும். உங்களது சொந்த வேலைக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துங்கள். நண்பர்களுடன் தொடர்பு குறைந்தாலும் உறவினர்களுடன் அன்பு அதிகரிக்கும்.
ஜூன் மாதத்தில் மனங்கவரும் ஈர்ப்பு ஒன்று ஏற்படலாம். அதற்கு உங்கள் பேச்சுத் திறமை உதவிகரமாக இருக்கும். மே மாதத்தில் அரசு அல்லது உயர் அலுவலர் ஒருவரின் உதவி கிடைக்கும். சளி, இருமல் பிரச்னை உடலில் காணப்படும். மூதாதையர் சொத்து விவகாரம் உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினரே, இந்த ஆண்டு தொடக்கம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், காலப்போக்கில் நிலைமை அனுகூலமாக மாறும். சொந்த மற்றும் தொழில் வாழ்க்கையில் மற்றவர்களுக்குச் சிக்கல் உண்டாக்காமல் தீவிரமாகச் செயல்படுங்கள்.
சொந்த வாழ்க்கை, தொழில் இரண்டிலும் அனுகூலமான வாழ்க்கை ஏற்படும். வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இறுதி மூன்று மாதங்களின் போது எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்கும் முன்னர் உங்களது வாழ்க்கை துணையிடம் பேசி அவரது கருத்துகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் வரை மூக்கு, காது அல்லது தொண்டை தொடர்பான சிக்கல்களுக்கு வாய்ப்புள்ளது. இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் உங்களது பேச்சு தெளிவாக இருக்க வேண்டும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள காலத்தில் உங்களது எதிரிகளிடம் விழிப்புடனும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.
மிதுனம்:
உங்களது நடவடிக்கைகளில் அதிக தெளிவும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரவேண்டும். வாய்ப்புகள் உங்கள் கை நழுவி செல்வது போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், திட்டமிட்டு கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. நிதி பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உயர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினருடன் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மன உறுதி காரணமாக எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியும். முதலில் நிதி நிலையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பேச்சின் இனிமையையும், தெளிவையும் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். காரிய வெற்றி கைகூடும்.
கடகம்:
இந்தாண்டு பல வெற்றிகளை உங்களுக்கு கொடுக்கப் போகிறது. ஆகவே, நேர்மறையான எண்ணத்தோடு போராடத் தயாராகுங்கள். உங்களுக்குப் பிடித்தமான ஒருவரிடமிருந்து விலகியே இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அப்போது உங்களுக்கு விருப்பமானவரின் எண்ணத்தையும் சற்று சீர்தூக்கிப் பாருங்கள். சில சமயங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கூட்டுத்தொழிலை தவிர்த்து விடுங்கள். காதல் வாழ்க்கை உங்களுக்குச் சாதகமாக இருக்கும். அதனை மேம்படுத்த தீவிரமான முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம். செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு பங்குச் சந்தை பக்கம் தலைவைத்து படுக்க வேண்டாம். பணவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. கூடுதல் முயற்சி மேற்கொண்டு போட்டித் தேர்வுகளை எழுதினால் வெற்றி கிட்டும். கொழுப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சிம்மம்:
சுறுசுறுப்பும், உற்சாகமும் மிகுந்த மாதமாக இந்தாண்டு உங்களுக்கு மாறப் போகிறது. இதுவரை தெளிவில்லாமல் இருந்த உறவுகள் கூட உங்களை இனி புரிந்து கொள்வார்கள். வாழ்க்கையை மேம்படுத்த புதிய செலவுகளை செய்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தேவையற்ற அனுமானங்களில் மனதை அலைய விட வேண்டாம். புதிய உறவினைத் தொடங்குவதில் மற்றும் புதிய வாழ்க்கைத் துணையை தேடுவதிலும் அவசரம் வேண்டாம்.
திருமணம் தொடர்பான முடிவுகளை எடுக்க செப்டம்பர் மாதம் சாதகமாக இருக்கும். குடும்பத்தினருடன் கவனமாகப் பேசுங்கள். படிப்பில் முன்னேற்றம் இருக்கும். அருகிலிருப்பவர்களிடம் கவனமாக இருங்கள். படிப்பில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். சின்னச் சின்ன சோம்பல்கள் வந்து மறையும்.
கன்னி:
புதிய வாய்ப்புகள் வெற்றிக்கான நம்பிக்கையைக் கொடுக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தின் மீது கவனமாக இருங்கள். அவர்களிடம் தெளிவாகப் பேசுங்கள். நீங்கள் சொல்வது மட்டுமே சரியாக இருக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் காதல் விவகாரங்களில் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமண தம்பதியருக்கு மிகவும் சாதகமான ஆண்டு இது. மாணவர்கள் இந்தாண்டை நேர்மறையாகத் தொடங்கலாம். செப்டம்பரில் நண்பர்களுடன் வீணடிப்பதைத் தவிருங்கள்.
உங்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் எண்ணம் இருந்தால் இந்தாண்டு இறுதியில் அதில் வெற்றி கிடைக்கும். இந்த வருடம் உங்களின் உடல்நலத்துக்குச் சாதகமாக இருக்கக்கூடும். உங்களது உடல்நலத்தை பராமரிக்க சரிவிகித உணவு மற்றும் முறையான ஓய்வையும் எடுத்துக்கொள்ளவேண்டும். தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றையும் நடைமுறைப்படுத்திக் கொள்ளுங்கள்.
துலாம்: இந்த வருடத்தில் உங்களது கடுமையான முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும். தொழில், கல்வி, நிதி மற்றும் உறவுகளை மேம்படுத்த நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகளுக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். அது பிப்ரவரிக்குப் பின் சீரடையும். இந்த வாரத்தின் முதல் பாதியில் மூதாதையர் சொத்து தொடர்பான விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும். உங்கள் தந்தையிடம் இருந்து சில நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களது நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வருவாய் வழிகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். செப்டம்பருக்குப் பிறகு உங்களது வருவாய் ஸ்திரமாக இருக்காது. நீங்கள் நல்ல வாழ்முறையை அமைத்துக்கொள்ள நிதி நெருக்கடிகள் இல்லாமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.
இந்த வருடத்தில் உங்களது உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது நண்பர்களை அவ்வளவாக சந்திக்க முடியாமல் போகலாம். அதனால் அவர்களும் உங்கள் மீது வருத்தத்துடன் இருக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, சூழ்நிலையில் முன்னேற்றம் தெரியும்.
உங்களது காதல் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கக்கூடும். உங்களது காதலி அல்லது வாழ்க்கை துணையுடன் உங்களது நெருக்கம் அதிகரிக்கக்கூடும். மாணவர்களுக்கு இந்த வருடம் அனுகூலமாக இருக்கும். இந்த வருடத்தில் நீங்கள் உடல் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருக்கக்கூடும். இருந்தாலும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டு காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
இந்த வருடத்தில் நிலுவையில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு புதிய வழியையும் காண்பிக்கும். மற்றவர்களுடன் உங்களது தொடர்பு குறையக்கூடும். இருந்தாலும் பிப்ரவரிக்குப் பிறகு நீங்கள் புதியவர்களைச் சந்தித்து அவர்களுடன் சாதுர்யமான விவாதங்கள் மற்றும் பயனுள்ள உரையாடலில் ஈடுபட வாய்ப்புள்ளது. சமூக வலைதளத்தில் நீங்கள் தீவிரமடையக்கூடும். மற்றவர்கள் நீங்கள் சொல்வதைத் தவறாக புரிந்துகொள்வதைத் தவிர்க்க தெளிவாக பேசவேண்டும்.
விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்கள் வாங்க வாங்கக்கூடும். எதிர்மறை எண்ணத்தை நோக்கி வெளியேறுங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் சிறந்த பலன்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பானதாக அமையும். மாணவர்களுக்கு இந்த வருடம் நன்மை பயக்கும்.
உங்களது நிதி விவகாரங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு வல்லுநர்களின் அறிவுரையைப் பெறவேண்டும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் மூக்கு, காது மற்றும் தொண்டை தொடர்பான சிக்கல்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
தனுசு:
வாழ்க்கை உங்களுக்கு மெதுவாக நகர்ந்து செல்வது போலத் தோன்றினாலும், பிப்ரவரிக்குப் பிறகு நிலைமையில் முன்னேற்றத்தைக் காணலாம். வாழ்க்கையைப் பற்றி நேர்மறை எண்ணத்துடன் இருப்பீர்கள். நிதி நிலைமையும் முன்னேற்றம் பெறும். ஒரே சமயத்தில் நீங்கள் மகிழ்ச்சி மற்றும் குழப்பத்தைச் சந்திக்க நேரிடலாம். நீங்கள் வாழ்க்கைத்துணை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவரிடம் ஒரு சுமுகமான உறவைப் பராமரிக்க விட்டுக்கொடுத்து அல்லது சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.
பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இருந்து உங்களது வருமானம் நிலையின்றி இருக்கக்கூடும். அதனால் நீங்கள் முன்கூட்டியே திட்டமிடவேண்டும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் சமூக மற்றும் மதம் தொடர்பான விவகாரங்களின் மீது அதிகக் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு இந்த வருடம் கடினமாக இருக்கும் மற்றும் அதனால் அவர்கள் தங்களது பாடத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
மகரம்:
இந்த வருடம் உங்களுக்குச் சாதகமாக அமையும். முன்னேறுவதற்கு உங்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களது வேலை தொடர்பான இலக்குகளை அடைவீர்கள். உங்களது இலக்குகளை அடைய புதிய திட்டங்களை தீட்டுவதற்கு இந்த வருடம் அனுகூலமாக இருக்கும்.
வேலையில் ஆக்கப்பூர்வத் திறனை செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு வேலை உங்களை சோர்வடைய செய்தாலும், உங்களது உற்சாகம் அற்புதங்களை செய்யக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது மேலதிகாரி அல்லது முதலாளியிடம் இருந்து பாராட்டும் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த வருடத்தில் உங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்புள்ளது. அதற்கு நீங்கள் உங்களையே ஊக்குவித்துக்கொள்ள வேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் புதிதாக ஏதேனும் தொடங்கலாம்.
காதல் அல்லது திருமண வாழ்க்கைக்கு, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மாணவர்களுக்குச் செப்டம்பர் மாதம் புதிய சவால்களை கொண்டு வரக்கூடும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களது உடல்நலத்துக்குச் சாதகமாக இருந்தாலும், பருவகால மாற்றங்கள் அதனைப் பாதிக்கும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்பதன் மூலம் அதனைப் பராமரிக்க முடியும்.
கும்பம்:
இந்த வருடம் முழுவதிலும் உங்களது உறவுகளின் மீது கவனமாக இருக்க வேண்டும். மற்ற மாதங்களை விட இறுதி மூன்று மாதங்கள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், உங்களது குடும்பத்தினருடனான உறவின் மீது கவனமாக இருக்க வேண்டும். உங்களது உறவுகளின் மீது நீங்கள் தெளிவின்றி இருப்பீர்கள்.
செப்டம்பர் மாதம் வரை காதல் வாழ்க்கைத் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் ஒரு வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது கூட ஒரு தவறான முடிவாக இருக்கலாம்.
நீங்கள் ஏற்கெனவே ஒரு உறவில் இருந்தால் உங்களது வாழ்க்கைத்துணையை திருப்தி படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். உங்களின் உடல்நலத்தின் மீது பொறுப்புடன் இருக்க வேண்டும். உங்களது தொழிலில் சில சவால்கள் வரக்கூடும். சட்டம் மற்றும் அரசு தொடர்பான சிக்கல்களில் இருந்து விலகியே இருங்கள். இல்லையென்றால் அது உங்களது புகழ் மற்றும் பணத்தை விரைவில் வீணடித்து விடும். நன்மைகள் உங்களை வந்து சேர்வதற்கு தாமதம் ஏற்பட்டாலும், இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் நிலைமையில் முன்னேற்றத்தைக் காணலாம். புதிய நபர்களைச் சந்திப்பது மற்றும் விருந்து அல்லது கருத்தரங்கில் கலந்து கொள்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு நன்மையைத் தரும்.
மீனம்:
இந்த வருடம் உங்களுக்குப் பல வழிகளில் மிகவும் முக்கியமாக இருக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல சூழல் இருந்தாலும், அதை மாற்றவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தீவிரமாக இருக்கும். இருந்தாலும் செப்டம்பர் மாதம் வரை, புதிதாக ஏதேனும் தொடங்கும் போது அல்லது மாற்றும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. யார் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடாது. நீங்கள் இரும்பு, சிமெண்ட், கனரக கருவிகள் அல்லது கனரக வாகனங்களில் நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.
உங்களது இலக்குகளை அடைவதில் மும்முரமாக இருப்பீர்கள். சச்சரவுகள் அல்லது கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால், உங்களது பேச்சில் தெளிவும் இனிமையும் இருக்கவேண்டும்.
உங்களது காதல் வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும், முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சின்னஞ்சிறு சண்டைகள் வரும். பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதிக்குப் பிறகு, திருமணம் தொடர்பான முடிவுகளை எடுத்தால் நல்ல பலன்களைத் தரும்.
இந்த வருடத்தின் முடிவில் காதலியுடன் உங்களது உறவு வலுவடையும். குடும்பத்தினரின் சந்தோஷத்துக்காக நீங்கள் செலவு செய்வீர்கள். குடும்பத்தினர் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதற்கும் தீர்வு காணப்படும்.
ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை உள்ள காலத்தில் உங்கள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். மாணவர்கள் இந்த வருடத்தைச் சிறப்பாக தொடங்கினாலும், பிப்ரவரிக்குப் பிறகு குறிப்பாக கடினமான பாடங்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வருடத்தில் உங்களது உடல்நிலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும்.