இந்தியா அரசியல் சட்டத்தை ஏற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த 26ஆம் தேதி அதனைப் பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் நினைவுகூர்ந்து கொண்டாப்பட்டது. மேலும் மத்திய அரசு அடுத்த ஆண்டுவரை, அதனைக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளது.
அரசியல் சட்டத்தின் 70ஆம் ஆண்டு கொண்டாட்ட தினத்தில் இது தொடர்பாக ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள கோவர்தனா மடத்தின் தலைமை இந்து மத போதகரான சுவாமி நிஸ்சாலந்தாவும், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பெஜவரா அதொக்ஷா இந்து மடத்தின் போதகரான விஷ்வேஷா தீர்த்தாவும் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது, "தம்மால் இந்த அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சட்டத்திட்டங்களை ஏற்றுக் கொண்டால் பிராமணர்கள் வகுத்துள்ள வர்ணாசிரம தர்மம் என்னவாகும்?" என்றும் சுவாமி நிஸ்சாலந்தா கேள்வியெழுப்பிள்ளார்.
இதற்குப் பதில் அளித்த விஷ்வேஷா தீர்த்தா, "அப்போது இருந்த காலமும் சூழலும் தற்போது மாறியுள்ளது. ஆகையால் நாம் சட்டத்தை பின்பற்ற வேண்டும்" என்றார்.
அதற்கு நிஸ்சாலந்தா, "நமக்கு ஏற்ற சூழ்நிலையை நாம் தான் மாற்ற வேண்டுமே தவிர, நாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் ஒருபோதும் மாறக்கூடாது" என விளக்கும் அளித்தார்.
மேலும் பேசியவர், "பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? அதனால் இந்தியாவில் பாபர் மசூதி கட்ட விடாமல் இருப்பதை நாம் உறுதி செய்வது நம் கடமையாகும்" என்றார்.
அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்தியா என்னும் மதச்சார்பின்மை நாட்டில் ஒரு மதத்தை தூக்கி வைத்து பேசி மற்ற மதத்தினர்களை காயம் படுத்துவதும், மேலும் பாபர் மசூதி விவகாரத்தில் வன்முறை தூண்டும் வகையில் சுவாமி நிஸ்சாலந்தா இப்படி பொதுவெளியில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க: 'ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இதயம் ஒன்றுதான்' - ராகுல் சாடல்