பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்பீரித் சிங் தாலிவால் (Sukhpreet Singh Dhaliwal). புத்தா என்ற பெயரில் பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். இவர் மீது 15க்கும் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. சுக்பீரித் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்.
இவர் ஆர்மினியா நாட்டிலிருந்து நவ.22ஆம் தேதி நாடு கடத்தப்பட்டார். அன்றைய தினம் டெல்லி விமான நிலையத்தில் பஞ்சாப் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2011ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கொன்றில், சுக்பீரித் சிங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவரை கைது செய்ய பஞ்சாப் காவலர்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர். அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சுக்பீரித் சிங்கை கைது செய்ய காவலர்கள் முயன்றனர். ஆனாலும் அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் சுக்பீரித் சிங் ஆர்மினியா நாட்டில் வைத்து காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
சுக்பீரித் சிங் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலிஸ்தான் செயலிக்கு பின்னால் பாகிஸ்தான்