பஞ்சாப் மாநிலம், படிண்டா நகரை;ச சேர்ந்தவர் குர்பக்ஸ் சிங். இவர் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணி மட்டுமின்றி, பொது மக்களின் நலன் கருதி, விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவரின் சொந்த செலவில் பட்டிண்டா சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து வருகிறார்.
சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் தாம் இந்த பணியை செய்து வருவதாகவும், பணி ஓய்வுக்குப் பின்னரும் இந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட இருப்பதாகவும், மனிதர்களுக்கு சேவை செய்வது மிகப்பெரிய பக்தி என குருமார்கள் கூறியுள்ளதாகவும், காவலர் குர்பக்ஸ் சிங் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே, காவலரின் சேவையை பாராட்டி 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவருக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் படிண்டா நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் குர்ஜித் சிங் ருமானா தெரிவித்துள்ளார். பொதுமக்கள், காவலர் குர்பக்ஸ் சிங்கின் சமூகப் பணிகளைப் பாராட்டி வருகின்றனர்.