ETV Bharat / bharat

வேளாண் சட்டம்: போராட்ட களமாகும் பஞ்சாப்

சண்டிகர்: வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு சார்பில் நடைபெற்றுவந்த ‘ரெயில் ரோகோ’ ரயில் மறியல் போராட்டம் வருகின்ற 8ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்
பஞ்சாப்
author img

By

Published : Oct 5, 2020, 10:27 PM IST

மாநிலங்களவையில் கடந்த 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம். 2. விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 3. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்.

இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பஞ்சாபில் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ரயில் மறியல் போராட்டத்தை கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கே.எம்.எஸ்.சி) அறிவித்திருந்தது.

கடந்த செம்படம்பர் 24ஆம் தேதி முதல் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கே.எம்.எஸ்.சி) சார்பில் ‘ரெயில் ரோகோ’ ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். அப்போராட்டம் அக்டோபர் 5 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ரயில் மறியல் போராட்டம் இன்றுடன் முடிவுடைவதால் மேலும் 8ஆம் தேதிவரை போராட்டம் நடத்தப்படும் என கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு விவசாய சங்க பொதுச்செயலாளர் சுக்பிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ரயில் தடங்களில் குதித்தும், மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், அதில் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை தாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.