குருநானக் தேவின் பிறந்தநாளையொட்டி, சீக்கிய மக்களை பிளவுபடுத்தும் எண்ணத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். அந்தச் செயலியின் பெயர் '2020 சீக் ரெஃபெரெண்டம்' (2020 Sikh Referendum) என்றும் அது ஐஎஸ்ஐ அமைப்பு சீக்கியர்களை அழிக்க முன்னெடுத்துள்ள ஏற்பாடுகள் எனவும் கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கு கடந்துவந்த பாதை...!
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, சமூக ஒற்றுமையைப் பேணி பாதுகாக்கும் வகையில் இந்தச் செயலியை கூகுள் நிறுவனம், தங்கள் இயங்குதளத்திலிருந்து உடனடியாக நீக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கைவிடுத்துள்ளார்.