ETV Bharat / bharat

பொற்கோயிலில் சீக்கிய பெண்கள் வழிபாடு செய்யலாம்? - சட்டப்பேரவையில் தீர்மானம் - woman can perform kirtan

சண்டிகர்: அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில், சீக்கிய பெண்கள் வழிபாடு செய்ய வழிவகுக்கும் வகையில், பஞ்சாப் சட்டப்பேரவை புதிய தீர்மானத்தை இயற்றியுள்ளது.

அமிர்தசரஸ் பொற்கோயில்
author img

By

Published : Nov 8, 2019, 11:25 AM IST

அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய பெண்களுக்குக் கீர்த்தனை (பொது பிரார்த்தனை பாடல்கள்) செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சீக்கிய மதகுருக்களின் கோரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்து, சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பஞ்சாப் சட்டப்பேரவை நேற்று (நவ., 7) ஒரு குறிப்பிடத்தக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானத்தை மாநில அமைச்சர் டிரிப்ட் ராஜீந்தர் சிங் பஜ்வா முன்வைத்துப் பேசினார். அப்போது, “சீக்கிய மதகுரு நானக் தேவ் தனது வாழ்நாள் முழுவதும் சாதி அடிமைத்தனத்துக்கு எதிராகவும் பாலின சமத்துவத்துக்கு ஆதரவாகவும் போராடினார். அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் உள்ள நடைமுறை பெண்களுக்கு எதிராகவும் சமத்துவத்தில் பாகுபாடும் கொண்டுள்ளது. இதை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று அவர் கூறினார்.

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை: பினராயி விஜயன்

மேலும், சீக்கிய மத நடத்தை விதியின்படி, அம்மதத்தைச் சேர்ந்த பெண்கள் தர்பார் சாஹிப்பில் கீர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்ற அகாலி தலைவரின் கூற்றை டிரிப்ட் ராஜீந்தர் சிங் பஜ்வா மறுத்தார். புனித சீக்கிய ஆலயத்தில் கீர்த்தனை பாட சீக்கிய பெண்களுக்கு அகாலி தலைவர் ஜாகிர் கவுர் கூட அனுமதி கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதுவரையில் சீக்கிய ஆண்கள் மட்டுமே பொற்கோயிலில் கீர்த்தனைகள் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

26 ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் பங்கேற்று நிகழ்த்திய கின்னஸ் சாதனை! அப்படி என்ன செய்தார்கள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.