மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் புத்வார் பெத் பகுதியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மீண்டும் இவர்கள் தொழிலை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
தற்போது இந்த சிவப்பு விளக்கு பகுதியில், கோவிட்-19 தொற்றால் யாரும் பாதிக்கப்படாததால், மீண்டும் தொழிலை தொடங்க ஒருசில பாலியல் தொழிலாளர்கள் தயாராக உள்ளனர். கரோனா அச்சம் காரணமாக எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இவர்கள் பின்பற்ற வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
இதுகுறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தேஜஸ்வி சேவேகரி கூறுகையில், ”வாடிக்கையாளர்கள் ஆணுறை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதை போல தற்போது முகக்கவசம், கையுறை, கிருமிநாசினியும் பயன்படுத்த வேண்டும். சில பாலியல் தொழிலாளர்கள் வெப்ப ஸ்கேனர்களை வாங்கி தயாராக வைத்துள்ளனர்.
அதேபோல், வாடிக்கையாளர்கள் கட்டாயம் குளித்துவிட்டு வரவேண்டும். இருமல், காய்ச்சல் உள்ள எந்தவொரு வாடிக்கையாளரையும் சேர்க்க வேண்டாம் என பாலியல் தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: 'அரசு விடுதியில் சிறுமிகள் கர்ப்பம்'- யோகி அரசுக்கு பிரியங்கா சரமாரி கேள்வி