ETV Bharat / bharat

புல்வாமா தாக்குதல்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்! - புல்வாமா தாக்குதல்

டெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறி யூசப் சோபனுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

Pulwama
Pulwama
author img

By

Published : Feb 27, 2020, 10:23 PM IST

கடந்தாண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் யூசப் சோபன் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தை விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமை 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்ய தவறிய காரணத்தால் யூசப் சோபனுக்கு பிணை வழங்கி தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிபதி பர்வான் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பிணை வழங்கியதைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல், "வேலைப்பளு காரணமாக தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவில்லைபோலும். புல்வாமா தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கியது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இதனை அரசு பயன்படுத்தியது. உண்மையை வெளியே கொண்டுவர அரசு எப்போதும் நினைத்ததில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோரேகான் பீமா: இதுவரை 348 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.