ETV Bharat / bharat

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் - புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அடையாளம் தெரியாத கும்பல் புகுந்து மாணவர்களை தாக்கியதைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்
புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Jan 8, 2020, 12:07 AM IST

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.

அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆய்ஷி கோஷ் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் பேராசிரியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்

இச்சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் பெருமன்றச் செயலாளர் அந்தோணி, சங்க உறுப்பினர்கள் எழிலன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதையும் படிங்க: ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம்

Intro:புதுச்சேரியில் ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் மர்ம கும்பல் புகுந்து மாணவர்களை தாக்கியது கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்

Body:டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆய்ஷி கோஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில் பலர் காயமடைந்தனர் இந்த தாக்குதலில் பேராசிரியர் சிலருக்கு காயம் ஏற்பட்டது இதையடுத்து இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தினர் ராஜா சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இளைஞர் பெருமன்ற செயலாளர் அந்தோணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் எழிலன் சிவகுமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர் அப்போது திடீரென மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Conclusion:புதுச்சேரியில் ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் மர்ம கும்பல் புகுந்து மாணவர்களை தாக்கியது கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.