ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குப் பின்பு இன்று பள்ளிகள் திறப்பு - puduchery school open

புதுச்சேரி: இன்று (அக்.08) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின்பு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

puduchery school reopen
puduchery school reopen
author img

By

Published : Oct 8, 2020, 9:32 AM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. அதற்குப் பின் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று (அக்.8) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் கட்டுக்குள் வராத சூழ்நிலையில், புதுச்சேரி அரசின் பள்ளி திறக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. பல அமைப்புகளும் போராட்டம் அறிவித்திருந்தன. இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று(அக்.8) திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்புகளும்,செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் ஒரு மணிவரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வரும் மாணவர்களை மட்டுமே அனுமதிப்பது என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக பெற்றோர்களின் ஒப்புதலை பெறுவதற்கான மாதிரி கடிதம் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே தனது உப்பளம் தொகுதியில் பள்ளிகளைத் திறக்கவிடமாட்டோம் என புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் நேற்று (அக்.07) எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

'மக்கள் வரிப்பணத்தில் ஏழைத்தாயின் மகனுக்கு 8ஆயிரம் கோடி ரூபாய் சொகுசு தனிவிமானம்': பிரதமரை சாடிய ஜோதிமணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.