கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றிவருபவர் காந்தி . இவர் தற்போது காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தில் சிறப்பு நிலை தலைமை காவலராக பணியாற்றிவருகிறார் . இவர் சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்திவருவதாக காரைக்கால் அதிரடி படை காவல் துறைக்கு தகவல் வந்தது.
அதனடிப்படையில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காரைக்கால் கடற்கரை சாலை அருகில் தங்களது தேடுதலை தொடர்ந்தனர். அம்மன் கோயில்பத்து என்னும் இடத்தில் ஒரு கருவேல மரத்திற்கு கீழ் பொது இடத்தில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் பிரவீன் தலைமையில் அங்கு சென்ற அதிரடிப்படையினர் அங்கு சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கடலோர காவல் துறை சிறப்புநிலை தலைமை காவலர் காந்தி , அவரோடு சூதாட்டத்தில் ஈடுபட்ட பியூலா, வெள்ளிச் சிவம் , கலைமணி மற்றும் பிரசாந்த் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு நகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் . கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து 21 ஆயிரம் ரொக்க பணமும் 4 செஃல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத சூதாட்டத்தை கடலோர காவல் துறை தலைமைக் காவலர் காந்திதான் நடத்திவந்தார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
காரைக்காலில் கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, மூன்றாம் பாலினத்தவரின் சமூக விரோத செயல்கள் சரளமாக நடந்து வரும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக சூதாட்டம் நடைபெற்றதும் அதனை ஒரு சிறப்பு நிலை காவலரே நடத்தி வந்துள்ளதும், காவலர்கள் மத்தியில் பரபரப்பையும் , பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: