ETV Bharat / bharat

புதுச்சேரி லூர்து மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஈஸ்டர் பண்டிகை

புதுச்சேரி: கொடியேற்றத்துடன் தொடங்கிய வில்லியனூர் மாதா திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Pudhucherry
author img

By

Published : Apr 27, 2019, 3:25 PM IST

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தூய லூர்து அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அடுத்தபடியாக, லூர்து மாதாவிற்கென உலகில் கட்டப்பட்ட இரண்டாவது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயம் ஆகும். இத்தகைய சிறப்புமிக்க தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை முடிந்த வாரத்தின் சனிக்கிழமையான இன்று ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 5.30 மணிக்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது. பின்னர் ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மே மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடம்பரத் திருவிழா தேர் பவனி நடைபெற உள்ளது.

சில நாட்களுக்கு முன் இலங்கை தேவாலயத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Intro:Body:

புதுச்சேரி                                                                           27-04-19

புதுச்சேரி வில்லியனூர் மாதா திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவாலயத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட இரண்டாவது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி  காலை 5.30 மணிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது .அதன் பிறகு ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து மே மாதம் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  இரவு 7.30 மணிக்கு ஆடம்பர திருவிழா தேர் பவனி நடைபெற உள்ளது.

இலங்கை தேவாலயத்தில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் வாகனங்கள் உட்பட அனைத்தும் சோதனை மேற்கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.