புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உள்ளாட்சித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக விலகலை வலியுறுத்தி கடைகள் முன்பு மக்கள் நிற்பதற்கு ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்களிலும் சமூக இடைவெளியில் நாற்காலிகள் அமைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகத்தில் அவரை காண வரும் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் ஆகியோர் உடன் கலந்து ஆலோசனை நடத்துவதற்கு ஏதுவாக நாற்காலிகள் சமூக இடைவெளியில் அமைக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர். இச்செயல் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழும் என அலுவலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரோலி: தொலைபேசியில் வழக்கை விசாரித்து 23 பேருக்கு இடைக்கால பிணை!