புதுச்சேரியில் மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டன. இதற்கு துணைநிலை ஆளுநர் தற்போதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாடு பகுதிகளான கடலூர் மற்றும் விழுப்பரம் பகுதிகளின் வாயிலாக கரோனா பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த எல்லைப் பகுதியிலிருந்து கரோனா பரவும் அச்சம் உள்ளதாலேயே மதுக்கடைகள் திறப்பது தள்ளிப்போகிறது. இருந்தபோதிலும் அரசு மதுக்கடைகளை விரைவில் திறப்பது உறுதி" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மதுபான கடைகளுக்கு வெளிப்படையான ஏலமுறை' - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தகவல்