இது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், “புதுச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முகக்கவசங்கள் அணியாமலும் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மனம் உறுத்துகிறது. விதிகளை கடைப்பிடிக்காமல் அரசின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு கடைகள் செயல்பட்ட நிலையில், அவ்வாறு செயல்படும் கடைகளை மூட உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களால் புதுச்சேரி அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கன்னிக்கோயில், மதகடிப்பட்டு, காலாப்பட்டு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் வெளி மாநில நபர்கள் நுழைய தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் அதிகப்படியாக வெளியே நடமாடுவதால், கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால்தான் மதிப்பார்கள் என்றால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க..சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?