புதுச்சேரி அரசு யோகா, இயற்கை மருத்துவ பிரிவு, வாழ்வியல் முறை மாற்று சுகாதார மையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக கடற்கரை சாலையை வந்தடைந்தது. பேரணியில் யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் இயற்கை மருத்துவம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் சென்றனர். முன்னதாக சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் பேரணியை தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி இயக்குனரகம் மூலம் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் இப்படிதான் இயங்குது' - கல்லூரி மாணவிகளுக்கு நடந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்!