புதுச்சேரி, நேரு வீதியில் உள்ள குபேர் அங்காடியில் இயங்கி வரும் காய்கறி சந்தை வரும் 17ஆம் தேதி முதல் ஏஎப்டி மைதானத்திற்கு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் சமீபத்தில் அறிவித்தார். சந்தைப் பகுதிகளில் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பை அடுத்து, ஏஎப்டி மைதானத்தில் காய்கறி அங்காடிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு புதுச்சேரி மார்க்கெட் சங்கத்தினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்கெட் காய்கறி, பழ வியாபாரிகள் சங்கத்தினர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிதான் சந்தையில் பழங்கள், காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் அரசு தங்களை ஆலோசிக்காமல் திடீரென சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சாரனிடைசர்கள், முகக் கவசங்களைப் பயன்படுத்தி, தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து, அரசின் விதிமுறைகளை பின்பற்றி, ஒத்துழைப்பு அளித்து கடைகளை இங்கேயே நடத்த முடிவு செய்துள்ளதாகவும், வரும் 17ஆம் தேதி இங்கிருந்து கடைகளை ஏப்டி மைதானத்திற்கு மாற்ற தாங்கள் விரும்பவில்லை என்றும் இக்கூட்டத்தைத் தொடர்ந்து வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க : அனுமதியின்றி கடைவிரித்த வியாபாரிகள்: அப்புறப்படுத்திய காவலர்கள்!