ETV Bharat / bharat

கோலாகலத்துடன் சுதந்திர தின விழாவுக்குத் தயாராகும் புதுச்சேரி! - பிரெஞ்ச் கட்டுப்பாட்டிலிருந்த புதுச்சேரி

புதுச்சேரி: பல நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் கிடைத்த அங்கீகாரமான புதுச்சேரி சுதந்திர தினத்தை வரும் நவம்பர் 1ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகிவருகிறார்கள் புதுச்சேரி மக்கள்.

Puducherry
author img

By

Published : Oct 30, 2019, 9:32 PM IST

இந்தியாவுக்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றாலும் 284 ஆண்டுகாலம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலிருந்த புதுச்சேரிக்கு ஏழாண்டு கழித்து 1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதியே சுதந்திரம் கிடைத்தது.

முன்னதாக ஃபிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி மாநிலம், இந்தியாவுடன் இணைவது தொடர்பாகப் புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும் எதிராக எட்டு பேரும் வாக்களித்தனர்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைவது தொடர்பாக ஃபிரான்ஸ் நாடாளுமன்றம் சட்ட அங்கீகாரம் அளித்தது. அதன்பிறகு புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைந்து இந்திய அரசியலமைப்பு முறையை ஏற்றுக்கொண்டது.

ஆகவே முழு அதிகார மாற்றம் நிகழ்ந்த ஆகஸ்ட் 16ஆம் தேதியை தங்களது சுதந்திர தினமாகப் புதுச்சேரி கொண்டாடிவந்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி மக்கள், நவம்பர் ஒன்றாம் தேதியைப் புதுச்சேரி சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி அறுபது ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

போராட்டக்காரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2014ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமி. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அம்மாநில சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி இந்தாண்டு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி கடற்கரைச் சாலையில் தேசியக்கொடியை முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றவிருக்கிறார்.

கோலாகலத்துடன் சுதந்திர தின விழாவுக்குத் தயாராகும் புதுச்சேரி

இது குறித்து பிரெஞ்சு இந்தியா புதுச்சேரி பிரதேச விடுதலைக்கான மக்கள் நல நற்பணி இயக்கம் தலைவர் சிவராஜ் கூறுகையில், "நவம்பர் 1 புதுச்சேரி சுதந்திர தினமாக அரசு கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு கொண்டாடவில்லை. அரசின் இந்தச் செயலால் புதுச்சேரி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி சுதந்திர தினமாக அரசால் கொண்டாடப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.

இந்திய அரசும் பிரெஞ்சு அரசும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஆதரவளிக்கும்பட்சத்தில் புதுச்சேரி மக்கள் மீண்டும் ஃபிரான்ஸ் உடன் இணையலாம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களும் அதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆளுநர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு: கறுப்பு பலூன் பறக்கவிட்ட மக்கள்!

Intro:நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் குறித்த செய்தி தொகுப்பு

Body:புதுச்சேரியை ஏறத்தாழ 284 ஆண்டுகாலம் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் பிரெஞ்சுக்காரர்கள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்து விட்டது ஆனால் பிரெஞ்சுக்காரர் கட்டுப்பாட்டிலிருந்த புதுச்சேரிக்கு 7 வருடங்கள் கழித்தே 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி சுதந்திரம் கிடைத்தது பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது

முன்னதாக

பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி மாநிலம் இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது புதுச்சேரி வில்லியனூர் கீழூர் கிராமத்தில் இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும் எதிராக 8 பேரும் வாக்களித்தனர்

பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது அதன்பிறகு புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முறைப்படி ஏற்றுக்கொண்டது

1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது அதனால் முழு அதிகார மாற்றம் நிகழ்ந்த ஆகஸ்ட் 16ம் தேதியை தங்களது சுதந்திர தினமாகக் கொண்டாடி வந்தது புதுச்சேரி ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி விடுதலை போராட்ட வீரர்களும் புதுச்சேரி பிரெஞ்சு இந்திய மக்களும் நவம்பர் ஒன்றாம் தேதியை புதுச்சேரி சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர் சுமார் அறுபது ஆண்டுகாலம் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களினால் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரியில் விடுதலை நாளாக அறிவித்தது அப்போதைய ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் அரசு அதன்படி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது அன்று கடற்கரை சாலையில் தேசியக்கொடியை முதல்வர் நாராயணசாமி நேற்று வைக்கிறார் காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்

இதுகுறித்து பிரெஞ்சு இந்தியா புதுச்சேரி பிரதேச விடுதலைக்கான மக்கள் நல நற்பணி இயக்கம் தலைவர் சிவராஜ் கூறுகையில் புதுச்சேரி இந்திய சுதந்திரம் அடைந்ததும் பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த புதுச்சேரியை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டி பல கட்டங்களில் போராட்டங்கள் நடந்தன இதனை அடுத்து புதுச்சேரி எல்லையான கிராமத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த புதுச்சேரி காரைக்கால் மாகே அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இந்தியாவுடன் இணைப்பு தேவையா அல்லது பிரென்ச் ஆட்சி தொடர்வதா என்பதை தீர்மானிக்க ஓட்டளித்தனர் இதில் எதிராக 8 வாக்குகள் விழுந்தன என்றார்
நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை தினத்தை சுதந்திர தினமாக புதுச்சேரி அரசால் கொண்டாடப்பட வேண்டும் ஆனால் கொண்டாடப்படவில்லை அரசின் செயல் தவறானது என மத்திய அரசிடம் செஞ்சி இந்திய நற்பணி இயக்கத்தின் சார்பாக தனது தலைமையில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது பலகட்ட போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தப்பட்டன அதனை தொடர்ந்து டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அப்போது சந்தித்து உள்ளதாகவும் தாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை சுதந்திர தினமாக புதுச்சேரி அரசால் கொண்டாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்

இந்திய அரசு பிரெஞ்சு அரசு போடப்பட்ட ஒப்பந்தத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று புதுச்சேரி மக்கள் மீண்டும் பிரான்ஸ் உடன் இணைவது குறித்து விரும்பினால் இணையலாம் என்றும் ஒப்பந்தத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்

பிரஞ்ச் இந்திய போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு இதுவரை பென்ஷன் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் முன்வைத்தார்

குறிப்பு 1.tn_pud_03a_pondy_independent_day_stories_visual_7205842_feed01

2.tn_pud_03b_pondy_independent_day_stories_visual_7205842_feed02

3.1.tn_pud_03c_pondy_independent_day_stories_sivaraji_byte_7205842_feed03

4.tn_pud_03d_pondy_independent_day_stories_byte_sivaraj_7205842_feed04

Conclusion:நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் குறித்த செய்தி தொகுப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.