நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ”நேற்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 590 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரி மாநிலத்தில் 27 பேருக்கும், காரைக்கால் பகுதியில் மூன்று பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 210 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 87 பேரும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், காரைக்கால் பகுதியில் 21 பேரும், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு நபர் என மொத்தம் 322 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
புதுச்சேரியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 534 பேரில் 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.