ETV Bharat / bharat

அந்தமான் சிறை போல் இருக்கும் புதுச்சேரி மருத்துவமனை - நோயாளிகள் புலம்பல்! - Andaman Jail

புதுச்சேரி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை, அந்தமான் சிறை போல் இருப்பதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்தமான் சிறை போன்று இருக்கு புதுச்சேரி மருத்துவமனை

author img

By

Published : Jul 30, 2020, 6:54 AM IST

புதுச்சேரியில் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா தொற்று பரவல் கடந்த 1ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், ஜூலை 27 அன்று 141 பேருக்கு புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் 130 பேர், ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 11 பேர் என இதுவரை மொத்தம் மூன்றாயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சை பெற புதுச்சேரி கதிர்காமம் கோவிட்-19 அரசு மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகளும், ஜிப்மர் மருத்துவமனையில் கோவிட் பிரிவில் 500 படுக்கை வசதிகளும் உள்ளன.

புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனை குளியலறை

புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனை கழிப்பறை

இந்நிலையில், புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 56 கரோனா நோயாளிகளுக்கும் ஒரே ஒரு கழிப்பறைதான் என்றும் இதனால் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அந்தமான் சிறையில் இருப்பது போன்ற உணர்வை இந்த மருத்துவமனை ஏற்படுத்துவதாகவும், அரசு இதனை உடனடியாக சீர் செய்யவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க...இறுதிக்கட்ட பரிசோதனையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.