புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகவும், இலவசப் பேருந்து சேவையைத் தொடர்ந்து இயக்கக் கோரியும், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனைத்து பாடப் பிரிவுகளிலும் வழங்கக்கோரியும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் சார்பாக வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் நோக்கி பல்வேறு முழக்கங்களிட்டு பேரணி மேற்கொண்டனர். மேலும், மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உருவாகும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்: சபாஷ் தண்டனை வழங்கிய நீதிமன்றம்