வண்ணமயமான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. குப்பைகளாக இருந்த சாலைகளும் ஹோலி தினத்தில் வண்ணமயமாக மாறிவிடும்.
மக்களும் குதூகலமாக வண்ணப்பொடி கலந்த தண்ணீர் ஊற்றியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். டெல்லி, மும்பை, கவுஹாத்தி, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இரவு முழுவதும் ஹோலிகா தகன் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஹோலி பண்டிகையையேொட்டி ஆளுநர் மாளிகை அலுவலர்கள், பணியாளர்கள் மீது வண்ணப்பூவை தூவி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஹோலி கொண்டாடினார்.
இந்தக் காணொலியை ட்விட்டரில் பகிர்ந்த கிரண் பேடி, "தண்ணீரை வீணாக்காமல் இப்படியும் ஹோலி கொண்டாடலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் ஹோலி கொண்டாட்டம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து