புதுச்சேரி அரசு திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு புதுச்சேரி அரசின் திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெறுகிறது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
-
புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருது, ‘ஒத்த செருப்பு’-க்கு.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
அம்மாநில மாண்புமிகு முதல்வருக்கும்,தேர்வு செய்தவர்களுக்கும் மனம் நிறை நன்றி. pic.twitter.com/8RopUh0pEa
">புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருது, ‘ஒத்த செருப்பு’-க்கு.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 2, 2020
அம்மாநில மாண்புமிகு முதல்வருக்கும்,தேர்வு செய்தவர்களுக்கும் மனம் நிறை நன்றி. pic.twitter.com/8RopUh0pEaபுதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருது, ‘ஒத்த செருப்பு’-க்கு.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 2, 2020
அம்மாநில மாண்புமிகு முதல்வருக்கும்,தேர்வு செய்தவர்களுக்கும் மனம் நிறை நன்றி. pic.twitter.com/8RopUh0pEa
இந்தாண்டின் சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை வழங்கி ரொக்கப் பரிசாக ரூபாய் 1லட்சத்தை பார்த்திபனுக்கு முதலமைச்சர் நாராயணசாமி டிசம்பர் 15ஆம் தேதி வழங்கவுள்ளார்.