மத்திய அரசின் 'சுத்தம் - நிர்மலம் கடற்கரை அபியான்' திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணி இன்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த தூய்மை இயக்கத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி கடற்கரை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரைப் பகுதியைத் தூய்மைப் படுத்தினர்.
இதுபோல், புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியிலும் இன்று தூய்மைப் பணிகள் நடைபெற்றன. பொதுமக்களிடையே தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இதையும் வாசிங்க: 'கனவு நனவானது' - அயோத்தி தீர்ப்பு குறித்து உ.பி முன்னாள் முதலமைச்சர் கருத்து