ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவையை கூட்டாமல் மத்திய அரசின் உத்தரவுப்படி ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று (ஜூலை 27) புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை ஒட்டியுள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு