புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான தனவேல் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துவந்தார். அதுமட்டுமல்லாமல் கட்சித் தலைமைக்கு எதிராக அவர் செயல்படுவதாக பிற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.
அதனால் அவர் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினாக கருதப்பட்டுவந்தார். இந்த நிலையில் அவரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ், சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் அறிவிப்பில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவரம்:
காங்கிரஸ் - 15. (தனவேல் பதவி பறிப்பு)
திமுக - 3
சுயேட்சை - 1
என்.ஆர்.காங் - 7
அதிமுக - 4
மொத்தம் -30 எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தொடர்பான தவறான செய்திகளை வெளியிடும் ஆளுநர் மாளிகை - சுகாதாரத்துறை அமைச்சர்