#world coastal cleaning day: ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமை கடற்கரை தூய்மைப் பணி நாள் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி மாநிலம் கடற்கரை நெடுகிலும் தூய்மைப் பணி மேற்கொள்ள உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு தூய்மைப் பணியை துவக்கி வைத்தார். மேலும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் பங்கேற்று மாணவர்களின் உடல்வலிமை திறன் சிலம்பாட்டம் மற்றும் கராத்தே தற்காப்பு கலை போன்ற செயல் விளக்கங்கள் நடைபெற்றன. புதுச்சேரி கடலோர காவல்படையினர், பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனார்.
இதையும் பார்க்க: புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை மீண்டும் தொடக்கம்