புதுச்சேரி: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் அவரது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள நேருவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மாநில அமைச்சர் கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு நேருவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.