ETV Bharat / bharat

வெளியிடப்பட்ட புதுச்சேரி முதலமைச்சரின் கரோனா பரிசோதனை முடிவு - முதலமைச்சர் நாராயணசாமிக்கு கரோனா பரிசோதனை

புதுச்சேரி :  முதலமைச்சர் நாராயணசாமிக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

puducherry cm narayanasamy tested negative in corona

author img

By

Published : Jun 29, 2020, 6:27 PM IST

புதுச்சேரியில், முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலகத் தட்டச்சு ஊழியர் ஒருவருக்கு நேற்று முன் தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, இரண்டு நாள்களாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 84 அலுவலக ஊழியர்கள், பாதுகாப்புக் காவலர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியானது. அதில், முதலமைச்சர் உள்பட அலுவலக ஊழியர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு வீரர்கள், சட்டப்பேரவை காவலர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வர தாமதமாகியுள்ளது. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : தேசிய புள்ளியியல் தினம்; பிரசாந்தா சந்திர மஹலனோபிஸ் வாழ்க்கை ஒரு பார்வை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.