இதுதொடர்பாக இன்று செய்திகளுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி,
“மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறையும் இணைந்து நேற்று (செப். 30) ஊரடங்கு சம்பந்தமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். புதுச்சேரியில் கல்வித்துறை அலுவலர்களுடன் கலந்துபேசி 10, 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பெற்றோர் அனுமதி கடிதம் அவசியம்.
அவ்வாறு பெற்றோர் அனுமதி கடிதம் இல்லாமல் மாணவர்களை சேர்த்தால் அந்தத் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்.
புதுச்சேரியில் 90 சதவீத தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், இதில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. மதுபானக்கடைகளில் அமர்ந்து சாப்பிடவும் இரவு 9 மணி வரை அனுதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்” என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.