புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அளித்த தேனீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் மற்ற துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், நமச்சிவாயம், கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
துணை நிலை ஆளுநருக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் நேரிடையாக மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், தேனீர் விருந்து நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர். சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகை, சட்டமன்றம், அதன் எதிரில் உள்ள பாரதி பூங்கா ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இன்றுவரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.