கோபல்ல கிராமம் (நாவல்) கதவு (சிறுகதை) உள்ளிட்ட காலத்தால் அழியாதத் தன் படைப்புகளின் மூலம் தமிழ்நாட்டின், கரிசல் நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த, சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணன், புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் தற்பொழுது வசித்துவருகிறார். இவர் நேற்று தனது 97ஆவது வயதைப் பூர்த்தி செய்தார்.
இதனை முன்னிட்டு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் இன்று அவரை நேரில் சந்தித்து, பூங்கொத்துக் கொடுத்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.