இதுகுறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் ஆறு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் மாஹேவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தற்போது மேற்கண்ட பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அரசின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், புதுவை மாநிலத்தில் மருத்துவ பணியாளர்கள் கடந்த சில நாள்களாக எட்டு லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், காவல் துறை, வருவாய் துறை, மின்துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, சமூகநலத் துறை பணியாளர்கள் கரோனா பரவாமல் இருக்க இரவு பகலாக பாடுபடுகின்றனர்.
அவர்களால்தான் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அப்படி பணிபுரிவோருக்கு கரோனா பாதிப்பால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பின் தன்மைக்கேற்ப ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க...தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!